Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சாயம் படத்தின் 25 ஆம் நாள் வெள்ளிவிழா கொண்டாட்டம் திருச்சி ஸ்டார் தியேட்டரில் நடைபெற்றது.

0

'- Advertisement -

ஜாதி பிரச்சினையை மையமாக வைத்து கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி வெளியான சாயம் திரைப்படத்தின் 25ஆம் நாள் வெள்ளி விழா கொண்டாட்டம்.

தமிழகத்தில் சுமார் 100 திரையரங்கிற்கு மேலாக கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி ஜாதி பிரச்சினையை மையமாக வைத்து உருவான சாயம் திரைப்படம் வெளியானது,

தமிழ் சினிமாவில் ஜாதி பிரச்சினைகளைப் மையமாக வைத்து உருவான பரியேறும் பெருமாள் காலா ஜெய் பீம் உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது அந்த வகையில் சாயம் திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Suresh

சாயம் திரைப்படத்தில்
அபி சரவணன், ஷினி, பொன்வண்ணன், இளவரசு, போஸ் வெங்கட், தென்னவன், ஆதேஷ் பாலா, பெஞ்சமின், சீதா, செந்தில் குமாரி என பல திரையுலக பிரபலங்கள் நடித்துள்ளனர். சாயம் திரைப்படத்தினை அந்தோணி சாமி இயக்க, ஒவைட் லேம்ப் புரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. நாகா உதயன் என்பவர் படத்திற்கு இசையமைத்துள்ளார். சலீம் கிறிஸ்டோபர் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படங்களில் ஒன்றாக சாயம் திரைப்படத்தின் 25வது நாள் வெள்ளி விழா நிகழ்ச்சி திருச்சி ஸ்டார் திரையரங்கில் நடைபெற்றது.

சாயம் திரைப்படத்தின் 25ஆம் நாள் வெள்ளி விழா இணைத் தயாரிப்பாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் அய்யாக்கண்ணு,
திரைப்பட இயக்குனர்கள் முத்து, குகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் அந்தோணி சாமி, தயாரிப்பாளர்
ராமநாதன், இணை தயாரிப்பாளர்கள் முத்தையா, முருகானந்தம், சாயம் திரைப்படத்தின் கதாநாயகன் அபி சரவணன் என்கிற விஜய் விஸ்வா, நடிகர் விஸ்வா, மற்றும் சக கலைஞர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.