மணப்பாறை நகர் மன்றத் தேர்தலில் 53 ஆண்டுக்குப்பின் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கணவன் – மனைவியாக வெற்றி.
மணப்பாறை நகராட்சி தேர்தலில் 2 வார்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி.
மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகளுக்கு கடந்ந 19 தேதி நடைபெற்ற தேர்தலில் திமுக மதச்சார்பப்பற்ற முற்போக்கு கூட்டணி,அதிமுக, பிஜேபி, நாம்தமிழர் | அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் சுயேச்சைகள் என 132 பேர் போட்டியிட்டனர்
தேர்தலில் பேட்டியிட்டவர்களில் வெற்றி பெற்றவர்கள் கண்டறியும் வாக்கு எண்ணிக்கை 22-02-2022(அன்று) நடைபெற்றது.

திமுக மதசாற்ப்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக 8 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சி ஒரு வார்டிலும் , அதிமுக 11 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்ற இருவார்டுகளில் பேட்டியிட்ட வேட்பாளர்கள் இருவரும் கணவன் மணைவி என்பதும் மணப்பாறை முதல் நகர் மன்றம் 1969 ஆண்டு தேர்தலில் பஞ்சாலை தொழிலாளியான வி.பெருமாள் அவரின் மணைவி ராஜம் (எ) சுப்புலெட்சுமி வெற்றி பெற்றனர்.
53 ஆண்டுகள் கழித்து கணவன் மணைவியாக வென்று நகர் மன்றத்திற்கு செல்கிறார்கள் .
வெற்றி சான்றிதழ் பெற்ற பின் இருவரும் காந்திசிலை, பெரியார்சிலை, அண்ணாசிலை, காமராஜர்சிலை உள்ளிட்ட சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.