பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவிய போட்டி
டிசைன் ஓவிய பள்ளி சார்பில் திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் செளபாக்யா ஹாலில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பிப்ரவரி 27 ஆம் தேதி ஓவியப்போட்டி நடைபெறுகிறது.
ஓவியக்கலையில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில்
ஓவியப் போட்டி நடை பெறுகிறது.
எல்கேஜி, யூகேஜி மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதலும்,
1,2,3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
எனது கனவு பள்ளி தலைப்பிலும்,
4, 5 ,6 வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு வரலாற்று நினைவுச்சின்னங்கள் தலைப்பிலும்,
7,8,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கிறுக்கல்களை கொண்டு மாதிரி ஓவியம் வரைதல் தலைப்பிலும் ஓவியப் போட்டி நடைபெறுகிறது.
ஓவியப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அனுமதி இலவசம்.
போட்டியாளர்களுக்கு ஓவியப் போட்டிக்கான ஓவிய அட்டைகள் மட்டும் வழங்கப்படும்.
ஓவியம் வரைவதற்கும் வண்ணம் தீட்டுவதற்கும் உரிய பொருட்களை மாணவர்கள் கொண்டு வர வேண்டும்.
போட்டியில் பங்கேற்க கூடிய மாணவர்கள் பள்ளி அடையாள அட்டையுடன் அவர்தம் பெற்றோர்கள் பொறுப்பில் வந்து செல்ல வேண்டும்.
ஓவியப் போட்டிக்கான நேரம் ஒரு மணி நேரம் ஆகும்
ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த மூன்று ஓவியத்தினை தேர்வு செய்து முதல், இரண்டு, மூன்றாம் நிலை பெறும் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப் படுவார்கள்.
பிப்ரவரி 28ஆம் தேதி மாலை நடைபெறும்
பரிசளிப்பு விழாவில் கவிஞர் நந்தலாலா, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் ஆலோசகர் பொன்ராஜ், புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி முதல்வர் கிறிஸ்டினா பிரிகேட் உள்ளிட்டோர் பங்கேற்று பரிசளித்து சிறப்பிப்பார்கள்.
ஓவியக் போட்டிக்கான ஏற்பாட்டினை டிசைன் ஓவியப் பள்ளியின் நிர்வாக இயக்குனர் மதன், முதல்வர் நஸ்ரத் பேகம் செய்து வருகின்றனர்.