திருச்சியில் அரசு நிகழ்ச்சியில் போட்டோவுக்கு கொடுப்பதில் திமுக கவுன்சிலர், பொறுப்பாளர்கள் இடையே அடிதடி,
திருச்சியில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் பதவியேற்பதற்கு முன்னரே மாவட்டஆட்சித் தலைவர், பொதுமக்கள் முன்னிலையில் தகராறில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்.
தமிழகம் முழுவதும் இன்று போலியோ தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், திருச்சி பெரியமிளகுப்பாறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் ஆட்சியர் சிவராசு கலந்துக்கொண்டு சொட்டு மருந்து முகாமினைத் தொடங்கிவைத்தார்.
அப்போது மிளகுப்பாறை பகுதியைச் சேர்ந்த 54வது வார்டு திமுக கவுன்சிலரான புஷ்பராஜ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த போது, கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த 55வது வார்டு திமுக கவுன்சிலரான ராமதாசும் ஆட்சியர் பங்கேற்ற நிகழ்வில் பங்கேற்று ஆட்சியருக்கு பின்னால் நின்று போஸ் கொடுத்து உள்ளார்.
இதனால் ஆட்சியர் நின்றுக்கொண்டிருந்தபோது எனது வார்டுக்கு எப்படி வரலாம் என புஷ்பராஜ் கேட்டபோது, பதிலளித்துவிட்டு ராமதாஸ் அங்கிருந்து நகர்ந்தார்.
அதேநேரம் தேர்தல் நேரத்தில் ராமதாஸ் ஆதரவாளர் நடராஜன் உடன் ஏற்பட்ட உட்கட்சி பூசல் மற்றும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் தி.மு.க. கவுன்சிலர் ராமதாஸ் முந்திக்கொண்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன்,
ஆரம்ப சுகாதார மையம் முன்பு திமுக கவுன்சிலர் ராமதாஸ், புஷ்பராஜ் அவரது ஆதரவாளர்கள் மூவேந்தன்,மோகன்தாஸ் மற்றும் இவர்களது ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்ட ஆட்சி தலைவர் சிவராசு போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருவரையும் சமாதானப்படுத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.