திருச்சி இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை வெளியிட்ட முன்னாள் காதலனுக்கு போலீசார் வலை.
திருச்சி திருவெறும்பூர் திருவேங்கட நகரை சேர்ந்தவர் சாந்தி (வயது 26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் சென்னையில் உள்ள அசோசியேட் டெக்னிக்கல் கன்சல்டன்ட் என்ற கம்பெனியில் பல வருடங்களாக பணியாற்றி வருகிறார். அந்த கம்பெனியில் பணிபுரிந்த மதுரை செல்லுார் பகுதியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்ற வாலிபரை அவர் காதலித்து நெருங்கி பழகி வந்துள்ளார். அப்போது இருவரும் நிர்வாண புகைப்படங்களை செல்போன் மூலம் பரிமாறிக்கொண்டிருந்துள்ளனர். பிறகு இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதனால் காதல் முறிந்துள்ளது.
இருப்பினும் சாந்தியின் நெட்பேங்கிங் பாஸ்வேர்டை மாற்றுவது, ஆன்லைன் மீட்டிங்கில் தலையிடுவது என மீனாட்சி சுந்தரம் தொந்தவு செய்து வந்ததை தொடர்ந்து சாந்தி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்போது மீனாட்சி சுந்தரம் நேரில் வந்து மன்னிப்பு கேட்டு, இனி தலையிடமாட்டேன் என்று எழுதி தந்து விட்டு சென்றுள்ளார்.
அதன் பின் சாந்தி
வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சாந்தியின் சகோதரி இன்ஸ்டாகிராம் முகவரியில் சிலர் தொடர்பு கொண்டு, சாந்தியின் நிர்வாண வீடியோவை காட்டி உங்களை போல் உள்ளார் என்று பதிவிட்டு இருந்துள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் சகோதரி, முன்பின் தொியாத ஒரு நபரை தொடர்பு கொண்டு இது தனது அக்காவின் வீடியோ உங்களுக்கு யார் தந்தது? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் இந்த நிர்வாண வீடியோ தமிழ் டேடிங் குருப் என்ற டெலிகிராம் குழுவில் பதிவிடப்பட்டிருந்தது அதனால்தான் உங்களை தொடர்பு கொண்டோம் என்று தொிவித்துள்ளார்.
இது குறித்து சாந்தி திருச்சி மாவட்ட சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நிர்வாண வீடியோவை வௌியிட்டுள்ள மீனாட்சி சுந்தரம் குறித்து விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.