சென்னையில் வாக்குப்பதிவின் போது ஒருவரை தாக்கியதாக ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவின் போது ஒருவர் மீது தாகுதல் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கார் ஓட்டுநர் ஜெகன்நாதன் அளித்த புகாரில் திமுக தரப்பை சேர்ந்த 10 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.