பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வேன். 60வது வார்டு திமுக வேட்பாளர் காஜாமலை விஜய்.
திருச்சி காஜாமலை காலனி, முஸ்லிம் தெரு, இ.பி. காலனி,கோகுலம் காலனி சுந்தர் நகர் உள்ளிட்ட வார்டு வேட்பாளர் உள்ளடக்கிய 60வது வார்டு பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காஜாமலை விஜி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று முஸ்லிம் தெரு பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய குடும்பங்களை நேரில் சென்று நோட்டீஸ் அளித்து தனக்கு வாக்களிக்கும்ப்படி பணிவுடன் வாக்கு சேகரித்து வருகிறார்.
தான் வெற்றிபெற்றால் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வேன் என கூறினார்.
60 வார்டு வேட்பாளர் காஜாமலை விஜிவுடன் வட்ட செயலாளர் பி.ஆர்.ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் சென்றனர்.