வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 14 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அர்விந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
கெல்லமேட்டுத்தெரு,சஞ்சீவிராவ் சந்து,சின்னக்கடை வீதி,என்,எஸ்,பி ரோடு,
வானப்பட்டறை தெரு உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 14 வது வார்டில் வீடு வீடாக மற்றும் கடைவீதிகளில் சென்று நோட்டீஸ் கொடுத்து வாக்குகளை சேகரித்து வருகிறார்.
இப்பகுதியில் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தவர் அரவிந்த் சகோதரர் முன்னாள் கவுன்சிலர் ஆவின் கார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கு சேகரிப்பின் போது ஆவின் சேர்மன் என்ஜினீயர் கார்த்திகேயன், புங்கனூர் ஒன்றிய கவுன்சிலர் இன்ஜினியர் கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் சென்றனர்.