அடிப்படை வசதிகளை தீர்த்து வைப்பது எனது முதல் கடமை.திருச்சி 2வது வார்டு அமமுக வேட்பாளர் முத்துகிருஷ்ணன்.
திருச்சி ஸ்ரீரங்கம் காவலர் குடியிருப்பு, வ.உசி.தெரு,
கீழஉத்தர வீதி. சாஸ்திர விதி சக்கராகார்டன் உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய
திருச்சி மாநகராட்சி இரண்டாவது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் எம்.கே.முத்துகிருஷ்ணன் இன்று ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் தனக்கு பிரஷர் குக்கர் சின்னத்தில் வாக்களிக்கும்படி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின் போது எனது வார்டு பொதுமக்களின் அடிப்படை வசதிகளை தீர்த்து வைப்பதே எனது முதன்மை கடமை என கூறி வாக்குகள் சேகரித்தார்.
வேட்பாளர்களுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்றனர்.