டாக்டர் சுப்பையா பாண்டியன் ஏற்பாட்டில் வரும்14ம் தேதி மருத்துவர்களின் போர்வாள் 22ஆம் ஆண்டு இதழ் வெளியீட்டு விழா.
மருத்துவர்களின் போர்வாள் பத்திரிகையின் 22 ஆம் ஆண்டு இதழ் வெளியீட்டு விழா பிப்ரவரி 14ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டலில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகடமி, தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பாக பிப்ரவரி 14 அன்று காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
மருத்துவர்களின் போர்வாள் பத்திரிகையின் 22வது ஆண்டு மலர் வெளியீட்டு விழா மற்றும் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவ சேவை செய்த மருத்துவர்களுக்கும் சமூக சேவகர்களும் covid-19 சேவை விருது வழங்கி கௌரவிக்கும் விழாவும் நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், சேவையாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர் சுப்பையா பாண்டியன், டாக்டர் விஜய் கார்த்திக் ஆகியோர் செய்து வருகின்றனர்