Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அன்போடு, பணிவோடு,கெஞ்சி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.முதல்வர் மு.க.ஸ்டாலின்.

0

 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முன்னதாக அவர் பேசிய போது கூறியதாவது:

* ஒமைக்ரான் தற்போது மிரட்ட தொடங்கியிருக்கிறது. கொரோனாவில் இருந்து மீண்டு வந்த நமக்கு ஒமைக்ரானால் தடை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

* ஒமைக்ரானில் இருந்து பாதுகாத்துக்கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டும்.

* முந்தை வைரஸை விட ஒமைக்ரான் நோய் தாக்கம் குறைவு தான்.

* ஒமைக்ரான் நோய் தாக்கம் குறைவாக இருந்தாலும் பரவல் வேகம் அதிகம்.

* முகக்கவசம் மட்டுமே நமக்கு கேடயம், அதனால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

* சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

*அனைவரும் பாதுகாப்புடன் இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி.

* தடுப்பூசிகள், நோய் எதிர்ப்பை தொடர்ந்து அளித்து வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொண்டால் இறப்பு விகிதம் குறைவு.

* தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என அன்போடு, பணிவோடு, கெஞ்சி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன், புதிய வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்துவோம் என உறுதி ஏற்போம்.

* நோயில் இருந்து விடுபட்ட மாநிலம் என்ற பெயரை எடுக்கவேண்டும்; அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.