Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்.திருச்சியில் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி.

0

'- Advertisement -

 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையொட்டி திருச்சியில் அரசு-தனியார் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது.

வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே தமிழகம் முழுவதும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

அந்த வகையில் திருச்சி மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

தேர்தல் விதிமுறைப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான கட்டிட சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட வேண்டும். அதுபோல் சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் அரசியல் கட்சி சம்பந்தமான நோட்டீசுகள் மற்றும் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பதாகைகள் அகற்றப்பட வேண்டும்.

ஆனால் கட்சியினர் தங்களது சுவர் விளம்பரங்களை அழிக்கவில்லை. இதனால் மாநகராட்சி அதிகாரிகளே சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி திருச்சி ராக்கின்ஸ் ரோடு, கன்டோன்மென்ட்,பாரதிதாசன் சாலை, கலெக்டர் ஆபீஸ் ரோடு,கருமண்டபம்,கிராப்பட்டி, எடமலைபட்டி புதூர், டிவிஎஸ் டோல்கேட், உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கட்சி பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அப்புறப்படுத்தபட்டு வருகிறது.

சுவரில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் இந்த பணி மும்முரமாக நடைபெறுகிறது. மேலும் பஸ் நிறுத்தம் மற்றும் பஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களின் படங்களும் மறைக்கப்பட்டு வருகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.