பிளஸ் 2 மாணவி மற்றும்
8 ம் வகுப்பு சிறுவன் திடீர் மாயம்.
திருச்சி சுப்பிரமணியபுரம் பாரதியார் தெரு பகுதியை சேர்ந்தவர் ஞானவேல். இவரது மகள் தேவதர்ஷினி (வயது 17) இவர் கே.கே. நகரில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் டியூஷனுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .
பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர் .
ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஞானவேல் கேகே நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்.
இதேபோன்று உறையூர் பகுதியில் எட்டாம் வகுப்பு மாணவன் திடீரென மாயமானார் .
திருச்சி புதூர் முத்துராஜா தெரு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து .இவரது மகன் கார்த்தி (வயது 14 )இந்த சிறுவன் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ணா குடில் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவன் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல நாட்கள் தேடியும் எந்த தகவலும் கிடைக்காத காரணத்தினால் மாணவரின் தாய் சுந்தரி உறையூர் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கே.கே. நகர் பகுதியில் ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்த இளம்பெண் ஒருவர் மாயமானார். திருச்சி கே. சாத்தனூர் கலிங்க நகர் 4வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் காயத்ரி (வயது 17) இவர் திருச்சி எல்.ஐ.சி. காலனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார் .நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து முருகேசன் கே.கே. நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து காயத்ரியை தேடி வருகிறார்.