திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் மற்றும் மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள்.
தாய் தமிழுக்காக போராடி இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் அவர்கள் முன்னிலையில், மாவட்ட மாணவரணி செயலாளர் மணவை வழக்கறிஞர் கே.பி.டி.அழகர்சாமி தலைமையில்.. மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் அனைவரும் திரளாக பங்கேற்றனர்.