போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளை திருடிய பலே ஆசாமி.
திருச்சி கே .கே. நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தினேஷ் குமார் .(வயது 28) ஆயுதப்படை போலீஸ்காரர் ஆன இவர் அலுவலக நிமித்தமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணாமல் திடுக்கிட்டார் .
மர்ம நபர்கள் அவரது மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டனர்
.இதுபற்றி தினேஷ் திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் .சப்- இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப்பதிவு செய்து பலே ஆசாமியை தேடி வருகிறார்.