Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக அரசின் குடியரசு தின விழா வாகனத்த்தில் அழகுமுத்துக்கோனின் சிலை இடம்பெற முதல்வருக்கு பாமுக தலைவர் பாரதராஜா கடிதம்.

0

தமிழக அரசின் குடியரசு தின விழா வாகனத்தில்
முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோனின் சிலையை இடம்பெறச் செய்ய வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாரத முன்னேற்றக் கழகம் கோரிக்கை.

இதுகுறித்து யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழகத் தலைவர் பாரதராஜா யாதவ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.

டெல்லியில் வருகின்ற 26 ம் தேதியன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் மாநிலங்களின் வாகன அணிவகுப்பில் தமிழகத்திற்கான வாய்ப்பு பறிக்கப்பட்டது வேதனையான விசயம்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க .ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்.

மத்திய அரசின் சார்பில் டெல்லியில் 26- ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில்., மாநிலங்களின் வாகன அணி வகுப்பில் பங்கேற்க இருந்த தமிழக அரசின் வாகனத்தின் முன் பகுதியில் விடுதலைக்கு பல்வேறு வகைகளில் வித்திட்ட வ.உ.சிதம்பரனார்,
மகாகவி பாரதியார் ஆகியோரின் சிலைகளும்,பின் பகுதியில் வீரமங்கை வேலுநாச்சியார் சிலையும், மருது சகோதரர்கள் படங்களும் இடம்பெற்றுள்ளது என்றும்.அந்த வாகனம் அணிவகுப்பில் பங்கேற்பதற்கான வாய்ப்பு பறிக்கப்பட்டிருப்பது என்றும் வேதனையுடன் குறிப்பிட்டு இருந்தார்.ஆனால் நம் முதல்வரின் வேண்டுகோளை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

இதனால் தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில்.., விடுதலை வீரர்களை தாங்கியுள்ள அந்த வாகனம் பங்கேற்கும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத் தக்க விசயம்.

அதே சமயம் தமிழக அரசின் குடியரசு தின விழா வாகனத்தில்..,

வெள்ளையரின் பீரங்கி குண்டுகளை மார்பில் புன்சிரிப்போடு தாங்கிய முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் சிலையையோ அல்லது படத்தினையோ இடம்பெறச் செய்யாமல் புறக்கணித்து இருப்பது அத்தகைய மாவீரரின் வீரத்தினையும்,
புகழினையும் ஏன் வரலாற்றினையும் மண்ணில் புதைக்கும் செயலாகவே கருதுகின்றோம்.

இன்னும் பல வீரர்களும் விடுபட்டே உள்ளனர்.

இதன் மூலம் முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோனின் புகழை மறைக்க முயற்சிக்கும் தமிழக அரசின் இத்தகைய மனப்பான்மை.., இந்தியாவின் ஜனத்தொகையில் இரண்டாமினை நோக்கி பயணிக்கும் யாதவ சமுதாயத்தினருக்கு வேதனையை உண்டாக்கியுள்ளது.

தமிழக முதல்வரும்,அரசும் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ள வாகனத்தில் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலையையோ அல்லது படத்தினையோ இடம்பெறச் செய்து மாவீரரின் புகழை பறைசாற்றிட வழிவகை செய்திடுமாறு யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் வேண்டுகின்றோம்.

இவ்வாறு தமது கடிதத்தில் பாரதராஜா யாதவ் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.