Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல். மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம்.

0

'- Advertisement -

 

சட்ட கல்லூரி மாணவர் மீது தாக்குதல் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்.

சட்ட கல்லூரி மாணவர் மீதான தாக்குதலுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சென்னையை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹிம் என்பவர் கொடூங்கையூரில் பகுதி நேரமாக மெடிக்கல் கடையில் வேலை பார்த்து விட்டு சைக்கிளில் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் மாஸ்க் சரியாக அணியாத்தற்காக காவல்துறை அழைத்து அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.

Suresh

அந்த மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு, மிகவும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

காவல் துறையினரின் இத்தகை செயலை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.

மாஸ்க் போடாத காரணத்திற்காக கைது செய்து இரவு முழுக்க மிகவும் கடுமையாக தாக்கி முகத்தில் சிறுநீர் கழித்த காவல் துறையின் இத்தகை செயல் மனித உரிமைக்கு எதிரான செயலாகும். இது போன்ற ஒரு சில காவல் துறையினரின் மனித நேயமற்ற செயலால் ஒட்டு மொத்த காவல் துறையினருக்கும் ஆளும் அரசுக்கும் கெட்ட பெயரை உண்டாக்கும் வகையில் உள்ளது .

சட்ட கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை மிகவும் கடுமையாக தாக்கிய காவல்துறை அதிகாரிகளை இடம் மாற்றம் செய்வது ஒரு கண் துடைப்பு செயலாக உள்ளது. ஆகவே சம்பந்த பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது எந்த வித பாரபட்சம் பார்க்காமல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். தனது அறிக்கையில்

மேலும் துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுத்து பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

எனவே சட்ட கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை தாக்கிய காவல் துறையினர் மீது மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் . காவல் துறையினரால் பாதிக்க பட்ட அப்துல் ரஹீம்க்கு நீதி கிடைக்க தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என மாண்புமிகு முதல்வர் மு.க .ஸ்டாலின் அவர்களையும் தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் சைலேந்திர பாபு அவர்களையும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு காயல் அப்பாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.