திருச்சி கருமண்டபத்தில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது.
போலீசார் விசாரணை.

திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம்(வயது 55), இவரது மகன் பிரபு (வயது 32). இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனை நடைபெற்று வந்துள்ளது.
இதில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தன்னுடைய கையில் வைத்திருந்த அரிவாளால் மீனாட்சி சுந்தரத்தின் இடது கையில் பிரபு வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த மீனாட்சிசுந்தரம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.