திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப் பணித் திட்டம்
கொரானா விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், நோய் பரவலை தடுக்கும் விதமாகவும், தந்தை பெரியார் அரசு கலை மற்றும் கல்லூரியில்,
நாட்டு நலப் பணித் திட்டம் சார்பாக மாபெரும் தடுப்பூசி முகாமை இன்று காலை 9.30 மணியளவில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.சுகந்தி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இக்கல்லூரியில் நடத்தப்படும் நான்காவது மருத்துவ முகாம் இது ஆகும்.
இதுவரை உள்ள 80 சதவிகித மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் சிறப்பு விருந்தினராக மன்னார்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கே.கே.பாலச்சந்தர் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
முகாமில் நாட்டுநலப்
பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் வீ. சல்பனாதேவி முனைவர் சு.பாலமுருகன், முனைவர் அ.நோபல் ஜெபக்குமார் மற்றும் முனைவர் பா.பாலமுருகன் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர்.
இந்த கொரோனா சிறப்பு முகாமில் பெருந்திரளான மாணவர்கள்,
பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.