தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது .இதனால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு ,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதித்தது.
அதன்படி ஊரடங்கு நேரத்தில் காவல் துறை கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது அதில்;

இரவு நேர ஊரடங்கு , ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கில் அத்தியாவசிய பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் .மத்திய ,மாநில அரசு ,நீதித்துறை ,உள்ளாட்சி ,போக்குவரத்து ,வங்கி ஊழியர்களை அனுமதிக்க வேண்டும்
பத்திரிகை , பால் ,மின்சாரம் ,சரக்கு மற்றும் எரிபொருள் ,மருத்துவம் உள்ளிட்ட பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் .அத்தியாவசிய பணியாளர்களை அடையாள அட்டையை பார்த்து அனுமதிக்க வேண்டும்.
ஊரடங்கு வாகனசோதனையின் போது கனிவாக நடந்து கொள்ள வேண்டும் .அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர் ,பணி முடிந்து திரும்புவோரை அனுமதிக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.