Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்.இந்தியா தடுமாற்றமான தொடக்கம்.

0

 

தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. முதுகுவலி காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார்.இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியில், உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். புஜாரா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ரகானே டக்-அவுட்(0) ஆனார்.

அதன்பின் களமிறங்கிய ஹனுமா விஹாரி கேப்டன் கே எல் ராகுல் உடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்க போரடினார். விஹாரி 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிய மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் கே எல் ராகுல் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் களம் இறங்கிய ரிஷப் பண்ட் 17 ரன்களிலும் தாகூர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகினர்.

தென்னாப்பிரிக்கா அணியில் மேர்கோ ஜேன்சண் மற்றும் டுவானே ஒலிவியர் தலா 3 விக்கெட்டுகளையும், ரபாடா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தற்போது இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அஸ்வின் 42 ரன்களுனுடனும், சமி 2 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.