இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தொடங்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 25-ந் தேதியன்று பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரை ஆற்றினார். அப்போது அவர் கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது என அறிவித்தார்.
அதன்படி இன்று தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியது.
மாலை 5.20 மணி நிலவரப்படி 2,34,174 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 22,310 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
குறைந்தபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,886 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் 4,601 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” எனவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.