டாஸ்மாக் பணியாளர்களுக்கு உடனடியாக பணி உயர்வு வழங்க எஸ்சி/எஸ்டி டாஸ்மாக் பணியாளர்கள் நலசங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
19 ஆண்டுகளாக பணி உயர்வு இல்லாத டாஸ்மாக் பணியாளர்களுக்கு உடனடியாக பணி உயர்வு அளிக்க வேண்டும்- டாஸ்மாக் எஸ்சி/எஸ்டி பணியாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டல் சுமங்கலி ஹாலில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் எஸ்சி / எஸ்டி பணியாளர்கள் நல சங்கம் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் எஸ்சி / எஸ்டி பணியாளர்கள் நல சங்கம் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் அண்ணாதுரை மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் மாநில பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலும் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி முன்னிலையிலும் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்திய திருநாட்டின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவர்களின் மறைவிற்கு வீர வணக்கம் செலுத்தி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
மற்றும் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட மற்றும் இயற்கை மரணம் அடைந்த டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:
டாஸ்மாக் பணியாளர்களின் விற்பனை வேலை நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை சில்லரை விற்பனை நேரமாக மாற்றி அமைத்திட வேண்டும்.
பணிநிரந்தரம் செய்திட தாமதமாகும் பட்சத்தில் இடைக்கால நிர்வாக ஊதிய முறையை மேற் பார்வையாளர் களுக்கு 30,000, விற்பனையாளர்களுக்கு 25,000, உதவி விற்பனையாளர்களுக்கு 20,000 என்ற முறையில் ஊதியம் வழங்கிட வேண்டும்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு சுமார் 19 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காமல் இருப்பது மிகுந்த வேதனையாக உள்ளது எனவே உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
டாஸ்மாக் இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
ஆய்வு எனக்கூறி அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் களும் அனைத்து மாவட்ட மேலாளர்கள் பெரும்பாலும் அலுவலகத்தில் இருப்பதில்லை எனவே ஊழியர்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் கேட்பதற்கு வாரத்தில் ஒரு நாளாவது அலுவலகத்தில் இருக்கும்படி ஆவணம் செய்ய வேண்டும்.
டாஸ்மாக் பணியாளர் களை சமூக விரோதிகள் படுகொலை செய்வதும் தாக்குவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவே டாஸ்மாக் பணியாளர் களை சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழ்நாடு அரசு வனிப கழகம் கீழே இயங்கும் டாஸ்மாக் கடைகளில் அடிப்படை வசதி கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் இயங்கி வருகிறது அதை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் எஸ்சி / எஸ்டி பணியாளர்கள் நல சங்கம் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.