தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டி. பாரதிதாசன் பல்கலைகழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டம் வென்றது.
தென் மண்டல அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டி (2021-2022). திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் டிசம்பர் 23 ஆம் தேதி தொடங்கி 27 வரையில் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி, கேரளா ஆகிய 6 மாநிலங்களிலிருந்து
போட்டியை நடத்தும் திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் உட்பட 95 பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன. போட்டிகள் நாக்அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெற்றன.

இதில், திருச்சி, பாரதிதாசன் பல்கலைகழகம், சென்னை, வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், சென்னை, எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, மங்ளூர், மங்களூர் ஆகிய நான்கு பல்கலைக்கழகங்கள் லீக் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றன. லீக் போட்டிகளில் திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை,வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் அணியை 36-34, சென்னை, எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியை 37 -36 என்ற புள்ளிகள் கணக்கிலும், மங்களூர் பல்கலைக்கழகத்தை 49-26 என்ற புள்ளிகள் கணக்கிலும் என மூன்று போட்டிகளிலும் வென்று முதலிடம் பிடித்து, தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில் சாம்பியன் அணியாக தேர்வு பெற்றுள்ளது.
சென்னை,வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் அணி, மங்களூர் பல்கலைக்கழகத்தை 36-25 என்ற புள்ளிகள் கணக்கிலும், சென்னை, எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியை 40-33 என்ற புள்ளிகள் கணக்கிலும் என இரு போட்டிகளில் வென்று இரண்டாவது இடம் பிடித்தது.
மங்களூர் பல்கலைக்கழகம் சென்னை, எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியை 38-33 ஓரு போட்டியில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் எம். செல்வம் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் தத்தனூர், எம்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ். சேகர், புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி முதல்வர் சி. திருச்செல்வம், பதிவாளர் (பொ) எல். கணேசன், தேர்வு கட்டுப்பட்டாளர் (பொ) எஸ். ஸ்ரீனிவாசராகவன் மற்றும் பல்கலைக்கழக உடற்கல்வி துறைத் தலைவர் மற்றும் விளையாட்டு போட்டி செயலாளர் ஆர். காளிதாசன், ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.