தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் 57வது பிறந்தள் ; திருச்சியில் முதியோர்களுக்கு மதிய உணவு.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் 57வது பிறந்த நாளையொட்டி திருச்சியில் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி கே வாசன் பிறந்தநாளையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருச்சியில் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி கிராப்பட்டியில் உள்ள புனித தோமையார் கருணை இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு மதிய உணவு இன்று வழங்கப்பட்டது.
மாநகர் மாவட்ட தலைவர் இன்டர்நெட் ரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் குணா, மாநில செயலாளர் மதிவாணன், மாவட்ட பொருளாளர் தனபால் மாவட்ட இளைஞரணி தலைவர் தனசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜீவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.