Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சீரான பாதையில் செல்கிறது.பிரதமர் மோடி.

0

'- Advertisement -

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

நாட்டு மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

உலகின் பல நாடுகளில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வருகிறது,
நாம் அனைவரும் 20222- ஆம் ஆண்டுக்காக தயாராகி கொண்டு இருக்கிறோம்.

ஒமைக்ரான் பரவி வருகிறது.
அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இந்தியாவிலும் பலருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யபப்ட்டுள்ளது.

ஒமைக்ரானை கண்டு பீதி அடைய வேண்டாம், எச்சரிக்கையுடன் இருங்கள்.

இந்தியாவில் 18 லட்சம் கொரோனா படுக்கைகள் தயாராகி உள்ளன.
முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவதை மறந்துவிடக்கூடாது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

தடுப்பூசி செலுத்தும் திட்டம் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

மாநிலங்களிடம் கூடுதலான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
கொரோனா இன்னும் நம்மை விட்டு விலகவில்லை, என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தடுப்பூசியின் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைத்து வருகின்றன.
நமது தடுப்பூசி திட்டம் விஞ்ஞான அடிப்படையிலானது.

உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தொடர்ந்து நாம் முன்னணியில் இருக்கிறோம்.

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சீரான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.
இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.