Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தொழிலதிபர் மகளை காதலித்த பாடிபில்டருக்கு அரிவாள் வெட்டு.

0

'- Advertisement -

தொழிலதிபர் மகளுடன் காதல்:
திருச்சி உடற்பயிற்சி மைய மேலாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு,

5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு.

திருச்சியில் இன்று பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் அருண் பாபு (வயது 35). இவர் திருச்சி கோட்டை ஸ்டேஷன் ரோட்டில் உள்ள உடற்பயிற்சி மையம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

திருச்சி கோட்டை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாலு இவரது மகள் சரண்யா அந்த உடற்பயிற்சி மையத்திற்கு வந்து சென்றுள்ளார் .

அப்போது அருண்பாபுவுக்கும் சரண்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது .

இந்த பழக்கத்திற்கு பெண் வீட்டுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை அருண்பாபு உடற்பயிற்சி மையத்திற்கு வேலைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து அருண் பாபுவை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

இதில் அருண்பாபு பலத்த காயமடைந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .

அங்கு அருண் பாபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பெயரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து அருண் பாபுவை வெட்டிச்சென்ற 5 பேர் கொண்ட கும்பல் யார்? தொழிலதிபர் பாலு தான் உண்மையான காரணமா ? காதல் தகராறு காரணமா ?அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் இன்று பட்டப்பகலில் நடந்த அரிவாள் வெட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.