Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கஞ்சா விற்ற 3 பேரை அதிரடியாக கைது செய்த திருச்சி போலீஸார்.

0

'- Advertisement -

திருச்சியில் போலீசார் அதிரடி வேட்டை. கஞ்சா விற்ற 3 பேர் கைது.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து எடமலைப்பட்டிபுதூர் மில் காலனி , திண்டுக்கல் ரோடு, பெட்ரோல் பங்க் பகுதி மற்றும் ராம்ஜி நகர் செல்லும் பகுதிகளில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் தீவிரமாக ரோந்து சென்று கண்காணித்தனர்.

இந்த சோதனையின் போது மூன்று இடங்களில் கஞ்சா விற்றதாக பரத், லட்சுமணன், பேபி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.