திருச்சியில் விரைவில் சித்த மருத்துவக் கல்லூரி.அமைச்சர் கே.என்.நேருக்கு 2 லட்சம் சித்த மருத்துவர்கள் சார்பில் சித்த மருத்துவர் சுப்பையா பாண்டியன் நன்றி.
திருச்சியில் சித்த மருத்துவ கல்லூரி தொடங்க சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட முயற்சிக்கப்படும் என்று அமைச்சர் நேரு
கூறியதற்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ முகாம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. கண்காட்சியை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், திருச்சியில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் தொடங்க உள்ள தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ துறை மானியக் கோரிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதுணையுடன் திருச்சியில் சித்த மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.
இந்த அறிவிப்பு சித்த மருத்துவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கே.எஸ் சுப்பையா பாண்டியன் கூறுகையில், திருச்சியில் சித்த மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு 2 லட்சம் சித்தா, ஆயுர்வேத மருத்துவர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

