திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் செல்வராஜ் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
சமயபுரம் திருக்கோயிலில் பழுது நீக்கம் செய்து புணரமைக்கப்பட்டுள்ள தங்கரதம், தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின்படி, இன்று மாலை 06.00 மணி முதல் 07:00 மணிக்குள், ” அம்பாள் தங்கரதத்தில் எழுந்தருளி – தங்கரத உலா நிகழ்ச்சி திருக்கோயில் வெளிபிரகாரத்தில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தொடங்கி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் தமிழக அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்து சமய அறநிலையைத்துறை ஆணையர். மாவட்ட ஆட்சித் தலைவர்., அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் பங்கு பெறுகிறார்கள்.
எனவே, திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெறும் மேற்காணும் தங்கரத புறப்பாட்டு தொடக்க நிகழ்ச்சியில் பக்தர்கள். கிராம ஆன்மிக பெரியவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு அம்பாளின் திருவருளுக்கு பாத்திரராகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இத்திருக்கோயிலில் நாளை (16.12.2021) முதல் ஒவ்வொரு நாளும் தினசரி இரவு 07.15 மணிக்கு பக்தர்கள் பிரார்த்தனையின்படி, தங்கரத புறப்பாடு தொடர்ந்து நடைபெறும் ( திருவிழாக் காலங்கள் நீங்கலாக) எனவும், விரும்பும் பக்தர்கள் தங்கரதப் புறப்பாடு கட்டணத்தை திருக்கோயிலில் செலுத்தி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என கூறி உள்ளார்.