மாநகராட்சி முன்கள பணியாளர்களுக்கு கந்துவட்டிக்கு பணம் தந்து அராஜகத்தில் ஈடுபடும் அரசியல்வாதி மீது நடவடிக்கை எடுக்க வையாபுரி கோரிக்கை.
திருச்சியில் வழிகாட்டி பலகை மறைத்து விளம்பரம் செய்த கயவரை கைது செய்ய கோரி தியாகி வஉசி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள உள்ள அறிக்கை.
திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம், வார்டு 23, பாலக்கரை மெயின் ரோடு, பருப்புக்கார தெரு ( அருள்மிகு, மாரியம்மன் திருக்கோயில் ) அருகிலுள்ள நுழைவாயில் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு அரசியல் கட்சி தலைவருடைய நினைவு தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்ட பிளக்ஸ் விளம்பரப் பலகை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டு பலகை மீது பொருத்தப்பட்டுள்ளது.
வழிகாட்டி பலகை மீது விளம்பரம் செய்துள்ள நபர் மீது கடுமையான சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் பணி செய்வதாக மார்தட்டிக்கொள்ளும் அரசியல் கட்சி மக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள வழிகாட்டு பலகையை மறைத்து விளம்பரம் செய்துள்ள அந்த அரசியல் கட்சியினுடைய மக்கள் பணியை எப்படி இருக்கும் என்று பொது மக்களுக்கே வெளிச்சம்.
விரைவில் நடைபெறவிருக்கின்ற மாநகராட்சி தேர்தலில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பால் குணம் கொண்ட “சே “என்ற முதல் எழுத்து துவங்க கூடிய நபர் மாநகராட்சி முன்கள பணியாளருக்கு கந்து வட்டி கொடுக்கும் நபர் என்று தெரியவருகிறது.
மாநகராட்சி முன்கள பணியாளர்களுக்கு கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும்போது அவர்களின் வங்கி கணக்கு புத்தகம், டெபிட் கார்டு, குடும்ப அட்டை, ஆதார் கார்டு, ஓய்வூதிய புத்தகம், போன்ற அசல் ஆவணங்களை அபகரித்து வைத்துக் கொள்ளும் நபர் கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி இப்படி அராஜக போக்கில் வழிகாட்டுதல் பலகை மறைத்து விளம்பரம் செய்துள்ளதாக மாநகராட்சியில் பணிபுரிகின்ற முன் களப்பணியாளர்கள் முதல் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.
மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை இதுகுறித்து விசாரணை செய்து சம்பந்தப்பட்ட கயவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .
மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியவை வழிகாட்டு பலகை மீது அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரத்தை அகற்றினாலும் வழிகாட்டி பலகை மறைத்த நபர் யாரென்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு வாய்ப்பாக அமையக்கூடும் எனவே இதுபோன்ற தரமற்ற செயல் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே முடியும்.
நடவடிக்கை எடுக்குமா ?
காத்திருக்கும் பொதுமக்கள்
திருச்சி
“தியாகி” வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.