திருச்சியில் பல லட்ச ரூபாய் ஊழலில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் பராமரிக்கப்படுமா ? வஉசி ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் வையாபுரி கேள்வி.
திருச்சியில் பல லட்ச ரூபாய் ஊழலில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் பராமரிக்கப்படுமா ? வஉசி ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் வையாபுரி கேள்வி.
தியாகி வஉசி பேரவை ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவன தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூங்க இடம் இல்லையா?
வாங்க இயற்கை சூழல் நிறைந்த பகுதியில் சகல வசதியுடன் கூடிய உறங்கும் இடம்.
திருச்சி,மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம், வார்டு 23,பாலக்கரை மேம்பாலம் கீழ்ப்பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பூங்கா ஊழல் நாயகன் ரவிச்சந்திரன் மாநகராட்சி ஆணையராக, பணியில் இருந்தபோது பல லட்ச ரூபாய் செலவில் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டது
இதில் பல லட்சம் ரூபாய் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
மேற்கண்ட பகுதியில் மட்டுமல்லாது மாநகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள் பல பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது.
பாலக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை பூங்காவில் எங்க பராமரிப்பில்லாமல் சமூக விரோதிகளை கூடாரமாக பூங்கா இயங்கி வருகிறது.
பாலத்திற்கு கீழ்பகுதியில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளது.மேலும் இரவு, பகல் நேரங்களிலும் பூங்காக்கள் திறந்து இருப்பதால் சமூக விரோதிகள் உல்லாச வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். நடைபாதை யுடன் கூடிய பூங்காவாக இல்லாமல் உறங்கி ஓய்வெடுக்கும் பூங்காவாக தற்போது செயல்பட்டு வருகிறது.
இப்படி சமூக விரோதிகளுக்கு விலை உயர்ந்த மின் விளக்குகள், தண்ணீர் வசதி மற்றும் பாதுகாப்பான இடமாக, மேற்கண்ட பகுதி உல்லாச வாழ்க்கைக்கு உகந்த இடமாக பூங்கா அமைந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் பூங்காவை பராமரித்து பூங்காவில் நடைபெறும் உல்லாச வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பது
பொது மக்களின் கேள்வியாக உள்ளது.
விழித்திட வேண்டும் மாநகராட்சி நிர்வாக
ம்.
A. வையாபுரி. தலைவர்.
“தியாகி” வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன் திருச்சி.