Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி என்.ஐ.டி- திருவனந்தபுரம் சி.டி.ஏ.சி இடையே ஆராய்ச்சி மையம் நிறுவ ஒப்பந்தம்.

0

என்.ஐ.டி திருச்சி மற்றும் சீ-டி.ஏ.சி திருவனந்தபுரம் இடையே
அவசரநிலை பதிலளிப்பு உதவி அமைப்பு குறித்த ஆராய்ச்சி மையத்தை
நிறுவுவதற்குக் கூட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

22.11.2021:உயர்நிலை கணித்தல் மேம்பாட்டு மையம், திருவனந்தபுரம்
(சி-டி.ஏ.சி-டி) என்பது இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப
அமைச்சகம், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்
முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பாகும்.

நாடு முழுவதிலும்
உள்ள இடர்பாடு அழைப்பு பதிலளிப்பு மேலாண்மை அமைப்பு மேம்பாட்டு
நடவடிக்கைகளில் காவல் துறையினருடன் நீண்டகாலமாக இணைந்திருந்ததன் மூலம்,
அவசரநிலை பதிலளிப்பு உதவி அமைப்புக்கான

(இ.ஆர்.எஸ்.எஸ்) ‘ஒரு இந்தியா
ஒரு அவசர எண் 112’ ஐ செயல்படுத்துவதற்கான முழுமையான தீர்வை உருவாக்கும்
பொறுப்பிற்காக சி-டி.ஏ.சி-டியை மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு
செய்ததுடன், நாடு முழுவதும் இ.ஆர்.எஸ்.எஸ்-112 நடைமுறைப்படுத்துவதற்கான
முழுமையான தீர்வு வழங்குநராக சி-டி.ஏ.சி-டியை நியமித்துள்ளது.

அதன்படி,
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி
சி-டி.ஏ.சி்-டி இ.ஆர்.எஸ்.எஸ்-112 முதன்மைத் தீர்வினை உருவாக்கியுள்ளது.
தற்போது சி-டி.ஏ.சி-டியின் இ.ஆர்.எஸ்.எஸ்-112 நிறுவும் பணியானது அனைத்து
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளது.

இப்போது, செயல்திறன் மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றில் அமெரிக்கா மற்றும்
கனடாவின் என்.ஜி-911 அமைப்புகளுடன் பொருந்தக்கூடிய, அடுத்த தலைமுறை
முன்னேற்றத் தீர்வாக இ.ஆர்.எஸ்.எஸ்-112 யை நவீனப்படுத்த இந்திய அரசு
திட்டமிட்டுள்ளது.

உயர்நிலைத் தீர்வுகளை உருவாக்குவதில், சி-டி.ஏ.சி-டி தேசிய தொழில்நுட்பக்
கழகம், திருச்சிராப்பள்ளியுடன ஒரு கூட்டமைப்பு
ஒப்பந்தத்தில் (எம்.ஓ.ஏ) கையெழுத்திட முன்வந்துள்ளது.

இ.ஆர்.எஸ்.எஸ் நவீனமயமாக்கலுக்கான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும்
செயல்படுத்தலுக்கான மேம்பட்ட பகுப்பாய்வுத் தீர்வுகளை உருவாக்க என்.ஐ.டி
திருச்சியிடம் ஆலோசனை உதவியை நாடுகிறது.

செயற்கை நுண்ணறிவு , பொறி கற்றல், பெருந்தரவு மற்றும் நிறுவனத்
தரவுத்தளங்கள், தரவுப் பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்தல், எண்மின்
வரைபட சேவைகள், புவியியல் தகவல் அமைப்பு அடிப்படையிலான பகுப்பாய்வு, ஒலி
அலைவு பகுப்பாய்வு, உரைக்குப் பேச்சு , கைபேசி இருப்பிடத் தெரிவு, பட
செயலாக்கம் ,மாதிரிப் பொருத்தம் , காணொளி திரையிடல் மற்றும் பகுப்பாய்வு,
தகவல் பாதுகாப்பு மற்றும் குறியாக்கம், வணிக நுண்ணறிவு அறிக்கைகள்,
மீட்பு அலகுகளுடன் பாதுகாப்பான தகவல்தொடர்பு, அர்ப்பணிக்கப்பட்ட
கம்பியில்லாத் தெடர்பு , டிரோன்களைப் பயன்படுத்தி காணொளி
நுண்கண்காணிப்பு, கிளவுட் தொலைபேசியியல், ஐ.ஓ.டி மற்றும் பிளாக்செயின்
தொழில்நுட்பம் ஆகிய பல உயர்நிலைக் களங்கள் மற்றும் சிக்கல்கள் பற்றிய
ஆராய்ச்சிப் பணிகளைச் சி-டி.ஏ.சி-டி தொடங்கியுள்ளது

என்.ஐ.டி திருச்சி இயக்குநர் , முனைவர் மினி ஷாஜி தாமஸ் மற்றும்
சி-டி.ஏ.சி-டி யின் இ.ஆர்.எஸ்.எஸ்-112, திட்ட இயக்குநர் ஏ.
கலைச்செல்வன் ஆகியோரிடையே, என்.ஐ.டி திருச்சி ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைத்
துறை முதல்வர் முனைவர் எஸ். முத்துக்குமரன், ஒருங்கிணைப்பாளர் முனைவர்
என்.சிவகுமரன் பேராசிரியர், கருவிமயமாக்கம் மற்றும் கட்டுப்பாட்டுப்
பொறியியல் துறை மற்றக் குழு உறுப்பினர்கள் முனைவர் டி.கே.
ராதாகிருஷ்ணன்,
முனைவர் கே. சீனிவாசன், முனைவர் சிஷாஜ் பி. சைமன், முனைவர்
எம்.வெங்கடகிருத்திகா, முனைவர் எம்.பிருந்தா, முனைவர் பி.ஜேனட், முனைவர்
ரெபேக்கா மற்றும் முனைவர் பி.ஏ. கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் ,
ஒப்பந்தம் கையெழுத்தானது.

இயக்குநர் முனைவர் மினி ஷாஜி தாமஸ் பேசுகையில்
“இது போன்ற வசதியை என்.ஐ.டி திருச்சியில் ஏற்படுத்துவது, அவசரச்
சூழ்நிலையில் முடிவெடுப்பதை மேம்படுத்தும்.
இது பதிலளிப்பு நேரத்தைக் குறைத்து, சமூக நோக்கத்திற்கான சிறந்த தொழில்
மற்றும் நிறுவன தளத்திற்கு வழிவகுக்கும். இந்தக் கூட்டுமுயற்சி
அவசரகாலக் குறிப்புகளைக் கையாள ஒரு தானியங்கி வசதியை நிறுவுவதில் கவனம்
செலுத்துகிறது மற்றும் இடர்பாடுகளில் சிக்கியுள்ள மக்களுக்கு கூடிய
விரைவில் உதவி புரியும்” என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.