Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உதவி செய்ய ஆளும் கட்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.ஜெ.சீனிவாசனை புகழ்ந்து சென்ற மக்கள்.

0

'- Advertisement -

மாநகராட்சிக்குட்பட்ட 24வது வார்டு பாலக்கரை எடத்தெரு போன்ற ஒரு சில இடங்களில் தொடர் மழையினால் கடந்த சில நாட்களாக மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது.

இதனால் பொது மக்கள் பலரும் தமது இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வந்தனர்.

இதனை அறிந்த திருச்சி மாநகர முன்னாள் துணை மேயரும், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளருமான சீனிவாசன் உடனடியாக அவர்களுக்கு உரிய நலத்திட்ட உதவிகளை செய்ய ஏற்பாடு செய்தார்.இதன் பேரில் பாதிக்கப்பட்ட அனைத்து பொது மக்களையும் தனது அலுவலகத்திற்கு அழைத்து வந்து

அவர்களுக்கு நிவாரண உதவிகளை முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் மூலம் வழங்கினார்.

Suresh

இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் என்ஜினியர் .ரமேஷ் , பாலாஜி, முத்துக்குமார், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு,அசோக் குமார் , கௌசல்யா, உமாராணி,
தாமோதரன், ரோஜர் , ஆசைதம்பி,
பிரகாஷ்,
கணேஷ், நாகு, கிஷோர், அயூப் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உதவ வேண்டும் என்பவர்கள் ஆளும் கட்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை , பெயரளவுக்கு ஒவ்வொரு வார்டாகச் சென்று மனுக்களை வாங்கி எந்த பயனும் இல்லை.

சீனியை போன்று உதவக்கூடிய நல்ல எண்ணம் இருந்தால் போதும் என்று

நலத்திட்ட உதவிகளை பெற்றுச் சென்ற பொதுமக்கள் கூறிச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.