4ம் தேதி திருச்சியில் மாநில பொதுக்குழு. பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்க கூட்டத்தில் முடிவு.
திருச்சியில் பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்க கூட்டம்.
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில்
மாநில தலைவர் பகவதியப்பன் தலைமையில் நடைபெற்றது.மாநில பொதுச்செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் வேல்முருகன் வரவேற்றார் .முடிவில் மாநில பொருளாளர் ஜோதி பிரசன்னா நன்றி கூறினார் .
இந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ,திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், செல்வகுமார், புவனேஸ்வரி, தினேஷ் பாபு ,வெங்கடேஷ் பாபு, நாகராஜ், பாலசுப்பிரமணியன், பிரபாகரன், ரேவதி ராஜாத்தி ,கவிதா, ராஜேந்திரன், ரங்கராஜ், கருணாநிதி ,விஜய், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையில் புதிய நிர்வாக பணியிடங்களை தோற்றுவித்து, தற்போது உள்ள நிர்வாக அமைப்பை மறு சீரமைப்பு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .வருகிற டிசம்பர் 4ஆம் தேதி திருச்சியில மாநில பொதுக்குழுவை கூட்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.