பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் நடைபெற்ற
மனித சங்கிலி போராட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி OBC மற்றும் அமைப்பு சாரா பிரிவு சார்பில் மனித சங்கிலி போராட்டம் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள காந்தி சிலையிலிருந்து பாலக்கரை ரவுண்டானா வரை ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் முத்து செல்வம் மற்றும் அமைப்பு சாரா பிரிவு தலைவர் பாரதி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் ராஜசேகரன், புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட பார்வையாளர் இல.கண்ணன்,மாநில வர்த்தக பிரிவு செயலாளர் முரளிதரன், மாவட்ட துணைத் தலைவர்கள் சிட்டிபாபு, கள்ளிக்குடி ராஜேந்திரன், இந்திரன்,மாநில மகளிர் அணி செயலாளர் லீமா சிவகுமார், கெளதம் நாகராஜன், மாவட்ட மகளிரணி தலைவர் புவனேஸ்வரி, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ராம்குமார், துணைத்தலைவர் சுவேந்திரன், மண்டல் தலைவர்கள் பரஞ்ஜோதி, புருஷோத்தமன்,சதீஷ்குமார், ரவிக்குமார், தொழில் பிரிவு ஸ்ரீராம், எம்பயர் கணேசன்,வாசன் வேலி சிவக்குமார் மற்றும் பலர் இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டனர்.