திருச்சியில்
14 வயது சிறுமி கர்ப்பம்
தாய்மாமன் போக்சே சட்டத்தில் கைது.
திருச்சி மேலப்புதூர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த 14 வயது 10ம் வகுப்பு மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இந்த மாணவி திருச்சி கீழ பஞ்சப்பூர் நடுத்தெரு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கூடம் வந்து சென்று வருபவர்.
. இவரின் பெற்றோர் சென்னையில் உள்ளனர்.
இதையடுத்து அவரது பாட்டி மற்றும் உறவினர்கள் அந்த மாணவியை எடமலைப்பட்டி புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர் .
அங்கு டாக்டர் அவரை பரிசோதித்ததில்
அந்த மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .
இதுபற்றி உடனே மணிகண்டம் வட்டார சமூக நல அலுவலர் கௌரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த அவர் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
பின்னர் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அந்த மாணவியின் கர்ப்பத்திற்கு அவரின் தாய் மாமன் அருண்பாண்டியன் (வயது 22 ) என்பது தெரியவந்தது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமியை உடன் தனிமையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் அருண்பாண்டியனை போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.