Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அக்குபஞ்சர் தின விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

0

'- Advertisement -

தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பில் திருச்சியில் அக்குபஞ்சர் தின விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த விழாவிற்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவரும் ,தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார்.

டாக்டர்கள் ரவிக்குமார் ரியாஸ் அஹ்மத்,சமீர் பாஷா,ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் மாநில இணை பொது செயலாளர் ஜான்.ராஜ்குமார் வரவேற்புரை ஆற்றினார்.மருத்துவர்களின் நோய்களுக்கு தீர்வு என்ற தலைப்பில் மாநில இணை பொது செயலாளர் டாக்டர் அபுபக்கர் சித்திக்,வலி நீக்கும் புள்ளிகள் என்ற தலைப்பில் மாநில இணை பொது செயலாளர் டாக்டர் மகேஷ்,முக்கிய புள்ளிகள் என்ற தலைப்பில் மாநில இணை பொது செயலாளர் விஜய் கார்த்திக் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இந்த கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து ஏராளமான அக்குப்பஞ்சர் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழக அரசு 50 நடமாடும் சித்த மருத்துவம்தொடங்கி 150 சித்த ஆயுர்வேத மருத்துவத்தை வாய்ப்பு அளித்த தமிழக அரசுக்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

2 லட்சம் அக்குப்பஞ்சர் மருத்துவர்கள் சார்பாக அக்குபஞ்சர் மருத்துவர் களுக்கு தனி கவுன்சில் அமைக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் தகுதியுள்ள அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு ஊதியமில்லா பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

முடிவில் குமார், கணேசன், மதிகுமார் ஆகியோர் நன்றி கூறினார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.