நடிகர் சூர்யா ஜோதிகா இயக்குனர் ஞானவேல் ஆகியோரை கைது செய்ய பாமக மாநில துணை பொ.செ. பிரின்ஸ் திருச்சி எஸ்பியிடம் மூலம்.
வன்னியர் சமூகத்தினரை இழிவுப்படுத்திய
நடிகர் சூர்யா,நடிகை ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் எஸ்.பி.யிடம் மனு.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ம. பிரின்ஸ் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் பாட்டாளி மக்கள் கட்சியில் 20 ஆண்டுகளாக வன்னியர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறேன்.
இந்த நிலையில் சமீபத்தில் ஓ.டி.டி.யில் வெளியான ஜெய்பீம் படத்தை நான் பார்த்தேன். அந்த படத்தை பார்த்த பின்பு மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.
உண்மை சம்பவம் எனக்கூறி வன்னியர் சமுதாயத்தின் அடையாளத்தையும், எங்கள் சமுதாய தலைவரையும் இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.
எங்கள் சமுதாயத்தின் மறைந்த மாவீரன் குருவின் பெயரை பயன்படுத்தியும் வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசத்தை கொண்ட வன்னியர் சங்க காலண்டரை அவமதித்து உள்ளார்கள்.
இது போன்று சித்தரித்து ஜாதி மோதல்களை உருவாக்கும் வண்ணம் படம் எடுத்துள்ள அந்தப் படத்தின் இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.