அதிகாரிகளின் அலட்சியம்,
பள்ளி மாணவர்களுக்காக களத்தில் இறங்கிய பள்ளி ஆசிரியர்.
கடந்த 13ம் தேதி மழை வெள்ளத்தால் பாதித்த டெல்டா மாவட்டங்களை தமிழக முதல்வர் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து, திருச்சி வழியாக விமானம் மூலம் சென்னை சென்றார்.
அவர் வருகைக்காக சமயபுரம் அருகிலுள்ள மேல்நிலைப்பள்ளி பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலை நான்கு ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளை அகற்றியுள்ளனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர். முதல்வர் திருச்சி விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் சென்னை சென்று விட்டார் என்ற தகவல் அறிந்தும் தடுப்பு கம்பிகளை சரிசெய்யாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர் அதிகாரிகள்.
அந்த பகுதியில் எச்சரிக்கை விளக்கு இருப்பதை கூட கவனிக்காமல் அதிவிரைவாக செல்லும் வாகன ஓட்டிகளின் வேகத்தைக் குறைக்கவும், தொடர் விபத்து நடைபெறுவதாலும், பள்ளி மாணவர்கள் சாலையைக் கடப்பதற்கு சிரமப்படுவதாலும், பொது மக்களின் நலன் கருதியும் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளை அலட்சியமாக அப்படியே விட்டுச் சென்றதால்,
இன்று காலை சாலைகளை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சிரமப்படுவதை அறிந்த பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் மாணவர்களின் உதவியுடன் தடுப்பு கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு அதனை சரி செய்தனர்.
இதனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் ஆசிரியரையும், மாணவர்களை வெகுவாக பாராட்டி சென்றனர்.