வெள்ள சேதம் குறித்து பார்வையிட தமிழக முதல்வர் நாளை திருச்சி வருகை.
வெள்ள சேதம் குறித்து பார்வையிட தமிழக முதல்வர் நாளை திருச்சி வருகை.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளைவிமானம் மூலம் திருச்சி வருகை
டெல்டா வெள்ள பாதிப்பு சேதங்களை பார்வையிடுகிறார்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று மாலை சென்னை அருகே கரையைக் கடந்தது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது.
இந்த மழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நீர்நிலைகள் நிரம்பி டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியது .இதை ஆய்வுசெய்து, குறைகளை கேட்டறிந்து, அறிக்கை அனுப்ப அமைச்சர்கள் குழுவை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் வெள்ள சேதம் குறித்து பார்வையிடுவதற்காக நாளை(13ந் தேதி) காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திருச்சி வருகிறார்.
திருச்சி வரும் அவர் கார் மூலம் திருச்சியிலிருந்து தஞ்சைக்கு புறப்பட்டு செல்கிறார்.
பின்னர் மாலையில் மீண்டும் திருச்சி திரும்பி சென்னை புறப்பட்டு செல்கிறார் .