திருச்சி மாம்பழச்சாலை வீரமாகாளிஅம்மன் கோவிலில் நகைகள் திருட்டு.
திருவானைக்காவலில் வீட்டை உடைத்து கொள்ளை.
திருச்சி மாம்பழச்சாலை வீரமாகாளியம்மன் கோவில் நகைகளை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாம்பழ சாலையில் வீர மாகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபடுவது வழக்கம். பூசாரி வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டார் .அங்கு வந்த மர்ம ஆசாமி கேட்டை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் தாலிச்செயின் மற்றும் குத்துவிளக்கு உள்ளிட்ட பூஜை சாமான்களை திருடிச் சென்றுவிட்டான். இதுகுறித்து கோவில் செயலாளர் ஜெய்சங்கர் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி வழக்குப்பதிந்து கொள்ளை சம்பவம் தொடர்பாக அபிமன்யு என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றொரு கொள்ளை சம்பவத்தில்
திருவானைக்காவல் கொள்ளிடம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 50). இவரது வீட்டை உடைத்து 3 சவரன் தங்கச் செயின், ஒரு சவரன் எடை கொண்ட 2 மோதிரங்கள் மற்றும் பணம், வாட்ச் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிந்த திருவரங்கம் போலீசார் அபிமன்யுவை கைது செய்தனர். அவரிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த 2 வழக்குகளிலும் ஒரே வாலிபர் தொடர்புடையது குறிப்பிடத்தக்கது.