தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளராக பாரதிதாசன் நியமனம்
தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளராக பாரதிதாசன் நியமனம்
திருச்சி தெற்கு மாவட்ட
தேமுதிக செயலாளராக பாரதிதாசன் நியமனம்.
விஜயகாந்த் அறிவிப்பு.
திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக ஆர்.பாரதிதாசனை நியமனம் செய்து விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
தேமுதிக நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக ஆர். பாரதிதாசன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கட்சிப் பணி சிறப்பாக நடைபெற திருச்சி தெற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், தேமுதிக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து, தேசிய முற்போக்கு திராவிட கழகம் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மாபெரும் வளர்ச்சி அடைய அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து புதிய மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்ற பாரதிதாசன் தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.