திருச்சி ரயில்வே மேம்பால பணி தொடக்கம்.தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி.திருநாவுக்கரசர் எம்.பி.
திருச்சி ரயில்வே மேம்பால பணி தொடக்கம்.தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி.திருநாவுக்கரசர் எம்.பி.
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலம் கடந்த எட்டு – ஒன்பது ஆண்டுகளாக பணி நிறைவு பெறாமல் இருந்தது.
இப்பணி நிறைவு பெற இந்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 0.663 ஏக்கர் நிலம் இதற்காக தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்படைக்கப்பட வேண்டியிருந்தது.
இது நிலுவையில் இருந்தது.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எனும் முறையில்; தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் இப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன்.

இதற்காக பாதுகாப்புத் துறையின் பல்வேறு நிலையில் உள்ள அதிகாரிகள் பலரையும் தொடர்பு கொண்டு தொடர்ந்து வலியுறுத்தினேன்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களையும் நான்கு முறை நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தி வந்தேன்.
தற்போது இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்களின் மூலமாக இதற்கான அரசு ஆணை இத்துறையால் வெளியிடப்பட்டு நிலுவையில் நிற்கிற இப்பாலத்தின் பணிகள் சம்மந்தமாக வேலை தொடங்குவதற்கு (Grant of working permission) ஆணை வழங்கப்பட்டுள்ளது என்கிற செய்தியை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது தேர்தல் கால வாக்குறுதிகளின் முக்கியமான வாக்குறுதி ஒன்றினை நிறைவேற்றும் கடமையை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நன்றி
என திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.