தேமுதிக தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம். பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது.
தேமுதிக வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம். பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது.
- தேமுதிக பொது விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் ஆணைக்கிணங்க
திருச்சி தெற்கு மாவட்டம் மருங்காபுரி வடக்கு ஒன்றிய தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வளநாடு தங்காள் கோவிலில் தேமுதிக மாவட்ட பொறுப்பாளரும் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவருமான
ஆர்.பாரதிதாசன் தலைமையில் நடை பெற்றது.

இக்கூட்டத்தில் தேமுதிக கட்சியின் வருங்கால வளர்ச்சி குறித்தும், கழக கொடியினை அனைத்து பகுதியிலும் ஏற்றுவது, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து ஆலோசனைகள் செய்யபட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் வசந்த்பெரியசாமி, மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திபெருமாள்ராஜ் மற்றும் மருங்காபுரி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.