திருச்சியில் சாலைகளில் சுற்றித் திரிந்து விபத்துக்களை ஏற்படுத்தும் கால்நடைகளை வனப் பகுதியில் விடவேண்டும்.
திருச்சியில் சாலைகளில் சுற்றித் திரிந்து விபத்துக்களை ஏற்படுத்தும் கால்நடைகளை வனப் பகுதியில் விடவேண்டும்.
திருச்சியில் சாலைகளில் திரியும்
கால்நடைகளால் விபத்துகள் அபாயம்.
திருச்சி மாநகரில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்தாமல்,
உரிமையாளர்கள் மீண்டும் மீண்டும் தெருக்களில் திரிய விடுவதால், சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
திருச்சி மாநகராட்சியில், சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படும்.
சில நாள்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அதன் பின்னர் மாடுகள், குதிரைகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மீண்டும் தெருவிலும் குறிப்பாக வாகனங்கள் அதிகளவில் செல்லும் பிரதான சாலைகளிலும் திரிவது வழக்கமாகி விடும். சாலைகளில் நின்றிருக்கும் கால் நடைகள், திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி சண்டையிடுவதாலும், சாலையின் குறுக்கே செல்வதாலும் வாகன ஓட்டிகளால் வாகனத்தை திருப்பவோ அல்லது நிறுத்தவோ இயலாத வகையில் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகின்றது.
இதனால் கால்நடைகள் மூலம் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
கடந்த சில நாள்களுக்கு முன், திருவானைக்கா பகுதியில் ஒய் சாலை பகுதியில் சாலையின் நின்றிருந்த மாடுகள் திடீரென குறுக்கே சென்றதால் அவ்வழியே சென்ற பேருந்துகள் திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதால் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 22 பயணிகள் காயமடைந்தனர்.
இதுபோல திருச்சியில் மாநகராட்சியை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பிரதான சாலைகளான நீதிமன்றம், தென்னூர் அண்ணாநகர், புத்தூர், உறையூர், தில்லைநகர், கே கே நகர், விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட்,கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர், கருமண்டபம், அரியமங்கலம்,மத்திய பேருந்து நிலையம் வட்டாரப் பகுதிகளில், காட்டூர் என அனைத்துப் பகுதிகளிலும் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.
அண்மைக்காலமாக திருச்சியில் தேசிய நெடுஞ்ôசாலைகளிலும் அதிகளவில் கால்நடைகள் திரிவதால், வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது.
கால்நடைகளை கட்டுப்படுத்தாவிட்டால், அபராதம் விதிப்பது மற்றும் அவற்றை பிடித்து வண்டிகளில் ஏற்றிச் சென்று காட்டுப் பகுதியில் விடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொள்ள முடியும்.
இதில் அபராதம் விதிப்பது மட்டுமே எளிது. ஆனால் அபராதம் அடிக்கடி வசூலிப்பதில் சிரமம் ஏற்படுவதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு காரணம், மாடுகளை வண்டிகளில் பிடித்து ஏற்றி வேறு இடங்களுக்கு கொண்டு செல்வது எளிதான காரியமல்ல. ஆகவே அந்த நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொள்ள முடிவதில்லை. எனவே, உரிமையாளர்கள் அடிக்கடி அரபாதமும் செலுத்துவதில்லை. எனவே செய்வதறியாத உள்ளனர் மாநகராட்சி பணியாளர்கள்.
இந்த விவகாரத்தில் உரிமையாளர்களே நிலைமையை கருத்தில் கொண்டு தங்களது கால்நடைகளை அவர்களே கட்டுப்படுத்த வேண்டும்.
இல்லையேல் அபராதத் தொகையை அதிகரிப்பதுடன், வெளிநாடுகளைப்போல நவீன சாதனங்கள் கொண்ட பெரிய அளவிலாலன லாரிகளை கொண்டு வந்து கால்நடைகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.