பொதுமக்கள் அவதி. கண்டு கொள்ளாத திருச்சி நெடுஞ்சாலைத் துறை .
பொதுமக்கள் அவதி. கண்டு கொள்ளாத திருச்சி நெடுஞ்சாலைத் துறை .
திருச்சி பாஜக பாலக்கரை மண்டல் தலைவர் ராஜசேகரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தரமற்ற சாலைகளால் விபத்து பொதுமக்கள் அவதி.
கண்டுகொள்ளாமால் மெத்தன போக்கில் மாநில நெடுஞ்சாலை துறை .
திருச்சி தஞ்சை ரோடு பழைய பால்பண்ணையில் இருந்து….
காந்தி மார்க்கெட் செல்லும் சாலை
மழையில் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
வரகனேரி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள இரட்டை வாய்க்கால் பாலம் அமைத்து ஆறு மாதங்கள் கூட முடியவில்லை.
ஆறு மாதத்தில் இது வரை இரண்டு முறை.
தார் சாலை அமைக்கப்பட்டும் இந்த அவல நிலையில் உள்ளது.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை.
சாதாரன நாளில் கூட தினமும் பல ஆயிரம் பேர் பயணம் செய்யும் முக்கியமான இச்சாலையில் தீபாவளி நேரமான தற்போது மிகுந்த போக்குவரத்து நெரிசல் எற்படுத்தும் வகையில் தார்டின்களை நடுரோட்டில் வைத்து உள்ளனர்.
4 சட்டி மண், கல் அடித்தால் தற்காலிகமாக நிவாரண பணி மேற்கொண்டால் கூட தீபாவளி வரை பொது மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்க மாட்டார்கள்
எனவே உடனடியாக அதிகாரிகள் கவனம் செலுத்தி தரமான தார் சாலை விரைவில் அமைத்து விபத்துகளையும், உயிர் இழப்பையும் தடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்
என,
திருச்சி பாஜகவின்
பாலக்கரை மண்டல் தலைவர்,
எஸ்.ராஜசேகரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.