திருச்சி 33 வது வார்டில் நிறைவேறாத பணியால் பொதுமக்கள் அவதி.பல லட்சம் தந்து பெற்ற ஒப்பந்தம் இது.தெனாவட்டாக பேசும் ஒப்பந்ததாரர் பாஸ்கர்.
திருச்சி 33 வது வார்டில் நிறைவேறாத பணியால் பொதுமக்கள் அவதி.பல லட்சம் தந்து பெற்ற ஒப்பந்தம் இது.தெனாவட்டாக பேசும் ஒப்பந்ததாரர் பாஸ்கர்.
திருச்சி சுப்ரமணியபுரம் 33வது வார்டு வள்ளுவர் தெரு, காந்திதெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சதுர கற்களை எடுத்துவிட்டு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்த பகுதியில் நடைபெறும் பணிக்கான ஒப்பந்தத்தை பெற்றவர் தேனியை சேர்ந்த பாஸ்கர் ஆவார்.
சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்காக இப்பகுதிகளில் கிராவல் மண், ஜல்லி போன்றவை தெருக்களில் கொட்டிவைக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தப் பகுதியை கடந்து செல்லும் முதியவர்களும், சிறுவர்களும் வழுக்கி விழுந்து பல விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஒப்பந்ததாரர் பாஸ்கரிடம் தெரிவித்தபோது நான் மாநகராட்சிக்கு பல லட்சம் லஞ்சம் கொடுத்து இந்த ஒப்பந்தம்பெற்று உள்ளேன். இது பற்றி நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் தெரிவித்து கொள்ளுங்கள் என தெனாவட்டாக பேசினார்.
மேலும் பத்திரிகையாளர்கள் இந்த சம்பவம் குறித்து விசாரித்த போது ஒப்பந்தார் பாஸ்கருக்கு ஆதரவாக ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் இன்ஜினியர் ரமேஷ் என்பவர் பஞ்சாயத்து பேசி வருகிறார்.
மனித உயிர்களுடன் விளையாடும் இதுபோன்ற ஒப்பந்ததாரரிடம் பணம் பெற்றுக்கொண்டு பணிகளை ஒப்படைக்கும் மாநகராட்சி அதிகாரிகளை என்ன கூறுவது என்று தெரியவில்லை .
உயிர் பலி ஏற்படும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் பாஸ்கர் ஆகியோர் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதே 33வது வார்டு சுப்ரமணியபுரம் பகுதியில் வாழும் பொது மக்களின் எண்ணம் ஆகும்.