6 மாதத்துக்கு பின் ராமேஸ்வரம் தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட அனுமதி
6 மாதத்துக்கு பின் ராமேஸ்வரம் தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட அனுமதி
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட விதிக்கப்பட்ட தடை காரணமாக கடந்த 6 மாதத்திற்கு மேல் தீர்த்த கிணறுகள் திறக்கப்படாமல் மூடப்பட்டன.
தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் வழக்கம்போல் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
6 மாதத்திற்கு மேலாக தீர்த்த கிணறுகள் மூடப்பட்டு கிடப்பதால் தீர்த்த கிணறுகளை நம்பி வாழும் 400-க்கும் அதிகமான யாத்திரை பணியாளர்கள் வருமானமின்றி, வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர்.

தீர்த்த கிணறை விரைந்து திறக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
6 மாதத்திற்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் இன்று முதல் தீர்த்த கிணறுகள் திறக்கப்படுவதால் பக்தர்களும் மற்றும் தீர்த்த கிணறுகளை நம்பி வாழும் 400-க்கும் அதிகமான யாத்திரை பணியாளர்களின் குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.