Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர் முழுவதும் அனுமதி இல்லாத டிஜிட்டல் பேனர்கள்.நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம் ?

திருச்சி மாநகர் முழுவதும் அனுமதி இல்லாத டிஜிட்டல் பேனர்கள்.நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம் ?

0

2017ம் ஆண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவு விழுந்ததில் ரகு என்பவர் உயிர் இழந்த நிலையில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி. அதிமுகவினர் விளம்பர பேனர் கிழிந்து விழுந்ததில் சென்னையை சேர்ந்த இளம்பெண் 23 வயது சுபஸ்ரீ உயிர் இழந்த நிலையில்

அரசின் விதிமுறைகளை மீறி டிஜிட்டல் பேனர்களை வைத்தால் குற்றவியல் நடவடிக்கையுடன், ஓராண்டு சிறை மற்றும் 5000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது.

பேனர்கள் வைப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தியது.

20 வருடங்களுக்கு முன் இந்த டிஜிட்டல் பேனர்களை ஏடி&டி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இன்று இந்த டிஜிட்டல் பேனர்களின் வருகை நிறுவனங்களுக்கு விளம்பர ரீதியாக லாபத்தை தந்தது.

ஏற்கெனவே பொங்கல் வாழ்த்துக்களும், தீபாவளி வாழ்த்துகளும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் விஸ்வரூம் எடுத்து விட்ட இந்த டிஜிட்டல் பேனரால் அடிக்கடி விபத்துகளும் , மரணமும் நிகழ்கிறது.

 

இந்நிலையில்தான் தமிழகம் முழுவதும் பேனர்கள், கொடிகள், கட்-அவுட்டுகள் வைப்பதற்கான தடை உத்தரவை கடுமையாக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அப்போதைய தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது.

இதில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக, உள்ளாட்சி அமைப்புகளின் நெடுஞ்சாலைகள், இணைப்பு சாலைகள், தெருக்கள் மற்றும் நடைபாதைகளில் டிஜிட்டல் பேனர் நிறுவக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதி நிதிகள் மற்றும் டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர்களுடன் மாவட்ட அளவிலான கூட்டம் நடத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவு விவரம் எடுத்துரைக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அரசியல் கட்சியினர் மற்றும் டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நினைவூட்டும் வகையில் சில தகவல்கள் தெரிவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அரசின் அறிவுரைகளை மீறி டிஜிட்டல் பேனர் நிறுவினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வதுடன், ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் டிஜிட்டல் பேனர்கள் அச்சிடுபவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனுமதியின்றி நிறுவப்படும் டிஜிட்டல் பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை கண்காணிக்க தவறும் அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தனை கடுமையான எச்சரிக்கைகள் ஐகோர்ட் அளித்தும் திருச்சி மாநகரில் உள்ள முக்கிய சாலைகள் எங்கும் டிஜிட்டல் பேனர்கள் நிறைந்து உள்ளது.

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள டிஇஎல்சி வணிக வளாக கட்டிடத்தின் மேல் தளத்தில் பல டன் எடை கொண்ட 100 அடி நீளத்திற்கு டிஜிட்டல் பேனர்கள் தனியாரால் அமைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு முதலில் லோக்கல் காவல் நிலையத்தில் கூத்து ஏற்படும் அபாயம் இல்லை போக்குவரத்திற்கு இடையூறு இல்லை என தடையில்லா சான்று வாங்க வேண்டும்,
பின்பு மாநகராட்சி அலுவலகத்தில் கட்டிடம் அரை கிலோ எடையைத் தாங்கக்கூடியது, பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லை என அனுமதி பெற வேண்டும், முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தடையில்லா சான்றிதழை காட்டி அனுமதி பெற வேண்டும்.

ஆனால் எந்த அனுமதியும் இல்லாமல் திருச்சி மாநகர் முழுவதும் தற்போது இந்த டிஜிட்டல் பேனர்கள் மூலம் தனியார்கள் மாதம் பல லட்சம் வருமானம் பார்த்து வருகின்றனர்.

இதன் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கணிசமான தொகையை மாதந்தோறும் பெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது டி.இ.எல்.சி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 100 அடி நீள பேனர் கிழிந்து உள்ளது. இது காற்றில் பறந்து போக்குவரத்து நிறைந்த சாலையில் கீழே விழுந்தால் பெரும் விபத்து
நிகழக்கூடிய வாய்ப்பு உள்ளது.

மாநகராட்சி செயற்பொறியாளர்,பொன்மலை கோட்ட உதவி செயற்பொறியாளர் (பாலமுருகன்) இந்த கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்தார்கள் என தெரியவில்லை.

ஏனெனில் இந்தக் கட்டிடத்தின் உள்ளே உள்ள மேற்கூரைகள் பெயர்ந்து கீழே விழுந்து வருகின்றது, மழை நேரத்தில் இது இன்னும் மோசமாக இருக்கும்.

இதே நிலைதான் திருச்சி மாநகரம் முழுவதும் உள்ள பெரிய பெரிய டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ள கட்டிடத்தில் நிலையும்.

உடனடியாக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரும், மாநகராட்சி ஆணையரும், காவல்துறை ஆணையரும் தீரவிசாரித்து உடனடியாக பெரும் விபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஆவல் ஆகும்.

Leave A Reply

Your email address will not be published.